12 கொலை : நண்பர்களுக்கு சயனைடு கொடுத்து கொலை செய்த பெண் தோழி கைது
சயனைடு பயன்படுத்தி தனது நண்பர்கள் 12 பேரை கொன்றதாக 32 வயது பெண்ணை தாய்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
சயனைடு கொடுத்து கொலை
தாய்லாந்தின் பாங்காங்க் நகரில் வசித்து வரும் சிரிபான் கான்வாங் கடந்த 14 ம் தேதி தனது தோழி சாராரத் என்பவருடன் ரட்சாபுரி மாகாணத்திற்கு சென்றுள்ளார், அங்கு உள்ள ஆற்றங்கரை பகுதிக்கு இருவரும் சென்ற நிலையில் சிரிபான் கான்வாங் மயங்கி விழுந்துள்ளார்பிறகு அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவை காணாமல் போன தாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றால் காவல்துறையினர் சிரிபான் கான்வாங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகவும், அவருடைய உடலில் சயனைடு விஷம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பெண் அதிரடி கைது
இதனால், சிரிபான் கான்வாங் தோழி சாராரத் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடந்தினார்கள். விசாரணையில் 12 பேரை சயனைடு கொடுத்து அவர் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலைகளை அவர் கடந்த 3 ஆண்டுகளாக செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
சாராரத் கொலை செய்த அனைவரும் சுமார் 33 வயது முதல் 44 வயது வரை இருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan