தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்கள் விடுமுறை? முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!
தீபாவளி விடுமுறை தொடர்பாக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் சென்றுள்ளன.
விடுமுறை?
தீபாவளி பண்டிகை வருகின்ற 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு சென்னை மற்றும் வெளியூர்களில் பணியாற்றும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்ப ஆயத்தமாகியுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இம்முறை தீபாவளி வியாழக் கிழமை வருகிறது. அடுத்த நாள் வெள்ளிக் கிழமை பணி நாளாகும். அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் வார விடுமுறை நாட்களாக உள்ளன.
இதனால் வெள்ளிக் கிழமை அரசு விடுமுறை தினமாக அறிவித்தால் பொது மக்கள், அரசு ஊழியர்கள் தீபாவளி கொண்டாட ஏதுவாக இருக்கும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தீபாவளியை கொண்டாட தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் வருகிற 31ஆம் தேதி அரசு பொது விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்த மறுநாள் நவம்பர் 1ம் தேதி மட்டும் அரசு அலுவலகங்கள் மட்டுமல்ல பள்ளிகளும் வேலை நாளாக உள்ளது.
ஸ்டாலினுக்கு கடிதம்
அதன் தொடர்ச்சியாக நவம்பர் 2 மற்றும் 3ம் தேதி முறையே சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாட்களாக உள்ளது. ஆகவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி ஒருநாள் மட்டும் தமிழக அரசு சார்பாக விடுமுறையாக அரசு அறிவித்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் நிலை உள்ளது.
இது தமிழக மக்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் சிறப்பாக 2 நாட்களை தங்களது குடும்பத்துடன் தங்கி இருந்து கொண்டாடுவதற்கு வசதியாக இருக்கும். அத்துடன், தீபாவளி முடிந்து பணிபுரியும் இடத்திற்கு மீண்டும் மக்கள் செல்ல பேருந்து வசதியும் எளிமையாகக் கிடைக்கும்.
ஆகவே, நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக் கிழமையை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் சார்பில் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.