தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. தீபாவளிக்கு பரிசு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பரிசு
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C, D பிரிவு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் அறிவிப்பு
8.33% போனஸ், 11.67% கருணைத்தொகை என மொத்தம் 20% வழங்கப்படும். நிறுவனங்களுக்கான உபரித்தொகை கணக்கில் கொண்டு 8.33% மிகை ஊதியம், 11.67% கருணைத்தொகை வழங்கப்படும்.
மின்துறையில் பணியாற்றும் C, D பிரிவு ஊழியர்களுக்கும் 20% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி வாரிய C, D பிரிவு ஊழியர்களுக்கும் 10% போனஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.