தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை - இந்த 19 மாவட்ட மக்களே Alert-ஆ இருங்க!

Tamil nadu Chennai TN Weather
By Vidhya Senthil Oct 31, 2024 09:33 AM GMT
Report

தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

 கனமழை

தமிழகத்தில் கடந்த அக்.,1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.

tn weather

இதனிடையே, மன்னார் வளைகுடா பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த இரண்டு அமைப்புகளில் ஏற்படும் தாக்கம் காரணமாக, வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

சென்னையில் மோசமடையும் காற்றின் தரம் - வெளியான அதிர்ச்சி தகவல்!

சென்னையில் மோசமடையும் காற்றின் தரம் - வெளியான அதிர்ச்சி தகவல்!

அதன்படி, நேற்று முதல் மீண்டும் கனமழை துவங்கியுள்ளது. நேற்றும் சென்னையில் கனமழை கொட்டிய நிலையில், தீபாவளியான இன்றும் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை  

திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது.

rain update

நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.