சென்னையில் மோசமடையும் காற்றின் தரம் - வெளியான அதிர்ச்சி தகவல்!
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
சென்னை
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் புத்தாடை அணிந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.
தீபாவளி என்றாலே, காற்றில் மாசு படிவது என்பது தொடர்கதையாகிவிட்டது. பெரும்பாலும் தலைநகர் டெல்லியில்தான் இப்படியொரு பிரச்சனை ஏற்படுகிறது.இதனால், அங்குள்ள மக்கள் சுவாச பிரச்சனை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுவாகக் காற்றின் தரம் AQI அளவுகளில் 4 வகையாக மதிப்பிடப்படுகிறது. "மோசமானது" என்றால் (AQI 201-300),என்றும் மிகவும் மோசமானது" என்றால் (AQI 301-400) என்றும் "கடுமையானது" என்றால் (AQI 401) (AQI450) என்றும் ,
காற்றின் தரம்
கடுமையாகத் தீவிரமானது" என்றால் (AQI450க்கு மேல்) என்பது காற்றின் தரத்தின் அளவுகோலாகும். அந்த வகையில் இன்றைய தினம் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
அதிகபட்சமாக ஆலந்தூரில் காற்று தரக் குறியீடு AQI248 ஆகப் பதிவு ஆகியுள்ளது. ஏற்கனவே டெல்லியில் மாசு படர்ந்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று முதல் காற்று மாசு அளவு அளவுக்கு அதிகமாகக் காணப்பட்டு வருகிறது.