எத்தனை முறைதான் எனக்கு திருமணம் செய்து வைப்பீங்க? நடிகை திவ்யா ஸ்பந்தனா வேதனை

Divya Spandana Marriage Tamil Actress
By Karthikraja Sep 14, 2024 03:30 PM GMT
Report

எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்து விட்டனர் என திவ்யா ஸ்பந்தனா வேதனை அடைந்துள்ளார்.

திவ்யா ஸ்பந்தனா

சிம்புவுடன் குத்து, தனுசுடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர் பல்வேறு கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 

divya spandana wedding

2012 ஆம் நடைபெற மாண்டியா பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திவ்யா ஸ்பந்தனா வெற்றி பெற்று எம்பி ஆனார். இதன் பின் 2019 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார். 

ஹேக் செய்யப்பட்ட சிலம்பரசன், நயன்தாராவின் X பக்கம் - நயன்தாரா போட்ட டிவீட்

ஹேக் செய்யப்பட்ட சிலம்பரசன், நயன்தாராவின் X பக்கம் - நயன்தாரா போட்ட டிவீட்

திருமணம்

இவர் 40 வயதை கடந்துள்ள நிலையிலும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனாலும் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக அவ்வப்போது வதந்திகள் பரவுவது வழக்கம். இதே போல் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் பரவியது. 

divya spandana marriage

இது குறித்து திவ்யா ஸ்பந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் "எனக்கு பலமுறை மீடியாக்கள் திருமணம் செய்து வைத்துவிட்டனர். எனக்கு உண்மையாகவே திருமணம் நடைபெறும் நிலையில் கண்டிப்பாக நானே சொல்வேன். அதுவரை இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற வதந்திளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார்.