மாதவிடாய் வலியால் துடித்தேன்; உறவினர்களே ஆள் வைத்து அடித்தார்கள் - சத்யராஜ் மகள் பகீர் தகவல்
உறவினர்களே என்னை ஆள் வைத்து அடித்தார்கள் என திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
திவ்யா சத்யராஜ்
பிரபல நடிகர் சத்யராஜுக்கு சிபிராஜ் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். சிபிராஜ், சினிமாவில் நடித்து வருகிறார்.

சத்யராஜின் மகள் திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். மேலும், மகிழ்மதி என்கிற இயக்கம் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார் திவ்யா சத்யராஜ். இந்த நிலையில், திவ்யா சத்யராஜ், கோவையில் தனக்கு நடந்த பகீர் சம்பவம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மதங்கள்
அதில், "எனக்கு கோயம்புத்தூர் என்றாலே பயமாக இருக்கும், காரணம் என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் எனது உறவினர்களே ஆள் வைத்து அடித்தனர். ஒருநாள் என்னை அடிக்க காசு கொடுத்து அடியாட்களை அனுப்பினர். அந்த சமயத்தில் எனக்கு மாதவிடாய் வந்திருந்து ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. அந்த பதற்றத்தில் என்னுடைய செல்போனையும் தொலைத்து விட்டேன். அதன் பின் எப்படியோ அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்துவிட்டேன்.
சென்னை வந்த பின்பும் அந்த சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். அப்பாவுக்கு விஷயம் தெரிந்து மிகவும் கோபமடைந்தார். ஆனால் என் வாழ்க்கையில் ஆண்கள் எனக்காக சண்டையிடுவதை நான் விரும்பமாட்டேன். நானே அதை எதிர்கொள்வேன். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் மற்றும் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்டதை ஒப்பிடுகையில் எனக்கு நடந்தது ஒன்றுமே இல்லை என்பதை நான் அறிவேன்.
மதங்கள் கௌரவ கொலைக்காகவும், காதலர்களை பிரிக்கவும், பெண்களை இழிவுபடுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. நான் கடுமையாக தாக்கப்பட்டாலும் பரவாயில்லை, இதுபோன்று கட்டமைக்கப்பட்ட மதங்களுக்கு எதிராகவும், சமூகத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்தும் தொடர்ந்து குரல் கொடுப்பேன். வாழ்க்கை அவ்வளவு எளிதானதும் அல்ல எனக்குள் இருக்கும் காயங்கள் இன்னும் ஆறவும் இல்லை ஆனாலும் மனதில் அன்புடனும், தைரியத்துடனும் கோவைக்கு தொடர்ந்து செல்வேன். வலிமையான பெண்கள் அன்பு செலுத்துவதை நிறுத்த மாட்டார்கள்" என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan