அருள்நிதி அரசியலுக்கு வருகிறாரா? அவரே அளித்த பதில்
நடிகர் அருள்நிதி அரசியலுக்கு வருவது குறித்து பதிலளித்துள்ளார்.
அருள்நிதி
வம்சம், மௌனகுரு போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் அருள்நிதி. தற்போது நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமாண்டி காலனி பாகம் 2 திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படக்குழுவினர்களான நடிகர்கள் அருள்நிதி, அருண்பாண்டியன் நடிகை பிரியா பவானி சங்கர், இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அரசியல் வருகை
அப்பொழுது பேசிய நடிகர் அருள்நிதி, வேண்டுமென்றே ஆகஸ்ட் 15 ம் தேதி இந்தப் படத்தை வெளியிடவில்லை. அந்நாளில் வெளியாகும் அனைத்துப் படங்களுமே வெற்றிப் பெற வேண்டுமென கூறினார்.

அருள்நிதியின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்போது அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை, 2062 ல் அது குறித்து யோசிக்கலாம். அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள் நானும் உயிருடன் இருக்கமாட்டேன் பதிலளித்துள்ளார்.
அருள்நிதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் ஆவார்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil