பாஜக அழைத்தது உண்மைதான்...அரசியலுக்கு வருகிறேன் - திவ்யா சத்யராஜ் அதிரடி
நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் தான் எந்த கட்சியில் இணைகிறேன் என்பதை தேர்தல் முடிந்த பிறகு கூறுகிறேன் என அறிவித்துள்ளார்.
திவ்யா சத்யராஜ்
தீவிரமான தி.க. கொள்கையில் இருந்து வரும் நடிகர் சத்யராஜ், தொடர்ந்து அரசியலிலும் தனது கருத்துக்களையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்தி வருகின்றார். தேர்தல் அரசியலில் இருந்து சத்யராஜ் விலகி இருக்கும் நிலையில், அவரது மகளான திவ்யா சத்யராஜ்ஜின் பக்கம் அரசியல் வெளிச்சம் விழுந்துள்ளது.
அவர் ஒரு கட்சியில் இருந்து வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில், அதனை மறுத்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தான் கட்சி ஒன்றில் இணையவுள்ளதாகவும் எந்த கட்சி என தேர்தலுக்கு பிறகு தெரிவிப்பதாக வீடியோ ஒன்றை திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியது வருமாறு,
எந்த கட்சி என..
அதில், கடந்து சில மாதங்களுக்கு முன்பாக ஊடகத்தில் அரசியலில் ஆர்வம் இருக்கிறது என நான் கூறிய பிறகு பலரும் எந்த கட்சியில் சேருவீர்கள்? உங்களுக்காக சத்யராஜ் பிரச்சாரம் செய்வாரா? ராஜ்யசபா சீட் கேட்பீர்களா? என பல கேள்விகளை என்னிடம் கேட்டார்கள்.
அரசியலுக்கு நான் வருவது பதிவியை பிடிக்க அல்ல. மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக. மகிழ்மதி இயக்கம் என்ற அமைப்பை கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறேன். அதன் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை இலவசமாக நாங்கள் அளித்து வருகிறோம்.
அந்த வகையில் அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துளேன்.ஒரு கட்சியில் இருந்து வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு அழைப்பு வந்தது உண்மை தான். ஆனால் எந்த ஒரு மதத்தை போற்றும் கட்சியிலும் இணைய விருப்பம் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம் நான் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதில்லை.
எந்த கட்சியில் இணைய போகிறேன் என்பதை வரும் மக்களவை தேர்தலுக்கு பின் அறிவிப்பேன். புரட்சி தமிழன் தோழர் சத்யராஜின் மகளாகவும், தமிழ் மகளாகவும் தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்பேன்.