தனியார் மருத்துவமனையில் முறைக்கேடு - சத்யராஜ் மகள் திவ்யா வெளியிட்ட பகீர் தகவல்!

Sathyaraj Viral Video
By Swetha Mar 09, 2024 11:50 AM GMT
Report

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் தனியார் மருத்துவமனைகளில் குறித்து பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திவ்யா சத்யராஜ்

ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் மகிழ்மதி இயக்கம்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.

தனியார் மருத்துவமனையில் முறைக்கேடு - சத்யராஜ் மகள் திவ்யா வெளியிட்ட பகீர் தகவல்! | Divya Roasts Money Grubbing Private Hospitals

வறுமையில் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை கடந்த மூன்று வருடங்களாக வழங்கிவருகிறார்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், ”சில தனியார் மருத்துவமனைகள் லாப நோக்கத்துக்கான, தேவையற்ற ரத்தம், ஸ்கேன், எம்ஆர்ஐ பரிசோதனைகளை செய்கின்றனர்.

துரை தயாநிதி திடீரென மருத்துவமனையில் அனுமதி; ஓடோடி சென்ற ஸ்டாலின் - என்னாச்சு?

துரை தயாநிதி திடீரென மருத்துவமனையில் அனுமதி; ஓடோடி சென்ற ஸ்டாலின் - என்னாச்சு?

பகீர் தகவல்

நோயாளி குணமடைந்தாலும் கூட, ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். இதனால், தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் நோய் குணமாகும் என்ற எண்ணத்தைவிட பணம் செலவாகும் என்ற எண்ணமே நோயாளிகளுக்கு உருவாகிறது” என கூறியிருந்தார்.

தனியார் மருத்துவமனையில் முறைக்கேடு - சத்யராஜ் மகள் திவ்யா வெளியிட்ட பகீர் தகவல்! | Divya Roasts Money Grubbing Private Hospitals

மேலும்,“தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் இந்த பித்தலாட்டம் குறித்து தன்னுடைய மருத்துவ நண்பர்கள் சொன்ன தகவல்களே இவை. எனவே, தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.