திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகளுக்கு புதிய பொறுப்பு!
திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுக
பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். இவர் மகிழ்மதி என்கிற இயக்கம் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார் . இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 9.01.2025 அன்று திமுக இனைந்தார்.
அப்போது பேசியவர் திமுக ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி.பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி என்று கூறியிருந்தார். மேலும் எனக்குச் சிறு வயதிலிருந்தே திமுகவின் கொள்கைகள் மீது ஈர்ப்பு உண்டு.
புதிய பொறுப்பு
எனக்கு மக்கள் பணி செய்வது நிறைய ஆர்வம். தலைவர் எந்த பதவி கொடுத்தாலும் கடுமையாக உழைப்பேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளராக திவ்யா சத்யராஜ் நியமிக்கப்பட்டார்.
மேலும், பலருக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள் என திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.