முதல்முறை அந்த காட்சியில் நடித்துள்ளேன் - திவ்யபாரதி ஓபன் டாக்
நான் நடித்த 3 படங்கள் ரிலீஸாகவில்லை என திவ்யபாரதி பேசியுள்ளார்.
கிங்ஸ்டன்
கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 25வது படம் கிங்ஸ்டன். இதில் திவ்ய பாரதி, அழகம் பெருமாள், சேத்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில், இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. வரும் மார்ச் 7 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ளது.
திவ்யபாரதி
இந்நிலையில் சமீபத்தில் நடந்த கிங்ஸ்டன் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகி திவ்யபாரதி, “கிங்ஸ்டன் படத்தின் கதையை கமல் பிரகாஷ் என்னிடம் சொன்னபோது ஒரு லுக் அவுட் வீடியோவையும் காண்பித்தார். அப்போதே இதில் நடிக்க முடிவு பண்ணிவிட்டேன்.
ஜிவி பிரகாஷ் உடன் எனக்கு 2வது படம். 'பேச்சுலர்' படத்திற்குப் பிறகு 3 படங்களில் கமிட்டானேன். எதுவும் ரிலீஸ் ஆகல. அதுதான் விதினு நினைக்கிறேன். முதல்முறையாக நான் ஸ்டன்ட் காட்சியில் நடித்துள்ளேன்" என பேசினார்.