சைந்தவியை பிரிய அந்த நடிகைதான் காரணமா? மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்
திவ்யபாரதி எனது நல்ல நண்பர் மட்டுமே என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் சைந்தவி
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தனது பள்ளி தோழியும், பிரபல பாடகியுமான சைந்தவியை காதலித்து வந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையில், சைந்தவி பாடிய பாடல்கள் பெரும்பாலானவை செம ஹிட் அடித்தது. இந்த தம்பதிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
விவாகரத்து
கடந்த மே மாதம் இருவரும் பிரிந்து வாழ போவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகினர். கருத்து வேறுபாடு காரணமாக புரிவதாகவும், இருவரும் நல்ல நண்பர்களாகவோ தொடர்வோம் என அறிவித்திருந்தனர்.
சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, சைந்தவி பாடியது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால்தான் சைந்தவி விலகியதாகவும் சமூகவலைத்தளங்களில் வதந்தி பரவியது. பேச்சுலர் படத்தில் நடித்ததில் இருந்தே நடிகை திவ்யா பாரதியுடன் ஜி.வி.பிரகாஷ்க்கு தொடர்பாக இருப்பதாக இணையத்தில் பேசி வந்தனர்.
திவ்யபாரதி
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இருவரும் இனைந்து கிங்ஸ்டன் படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் இருவரும் பிஸியாக உள்ள நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசியுள்ளனர்.
இதில் பேசிய திவ்ய பாரதி, விவாகரத்துக்கு பிறகு ஜி.வி. பிரகாஷ் சார் மற்றும் சைந்தவி மேம் இணைந்து கச்சேரிகளை நடத்துவதை பார்க்கவே ரொம்ப ஹேப்பியா இருக்கு.இதுக்கு பிறகு யாரும் நம்மை டார்கெட் பண்ண மாட்டாங்கன்னு நினைச்சேன்.
பெண்களே திட்டுவாங்க
ஆனால், இப்போதான் அதிகமா அசிங்கப்படுத்துறாங்க. அவங்க ரெண்டு பேரும் சூப்பர் ஜோடி, அவங்க வாழ்க்கையையே நான்தான் கெடுத்து விட்டேன் என பெண்களே அதிகமா திட்டுவாங்க. நான் அதை பார்த்தது ரிப்ளை பண்ண மாட்டேன். ஜிவி கிட்ட தான் காட்டுவேன் பாருங்க இப்படிலாம் சொல்றங்கனு, அவங்க அப்படி தான் விடுங்கனு சொல்லிடுவாரு. எனக்கு கஷ்டமா இருந்தது" என கூறினார்.
அதை தொடர்ந்து பேசிய ஜி.வி.பிரகாஷ், "நான் ஏதோ திவ்யபாரதி உடன் டேட்டிங்கில் இருப்பதாக சொல்றாங்க. படப்பிடிப்பு தளத்துக்கு வெளியே நாங்கள் சந்திப்பதே கிடையாது. எனக்கு திவ்யபாரதி ஒரு நல்ல நண்பர் மட்டுமே" என கூறினார்.