நயன்-விக்கி விவாகரத்தா? எழுந்த விமர்சனங்கள் - நயன்தாரா பண்ணத கவனிச்சீங்களா?
விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு நயன்தாரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நயன்தாரா- விக்னேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து 2022 -ல் வாடகைத் தாய் மூலம் 2 மகன்களை பெற்றுக் கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது கணவரை சமூக வலைதளத்தில் நயன்தாரா 'அன்பாலோ' செய்தது குறித்து ரசிகர்கள் பலவித வதந்திகள் பரப்பினர்.
முற்றுப்புள்ளி
மேலும், நயன்தாரா- விக்னேஷ் ஜோடி விவாகரத்து செய்துவிட்டதாகவும் வதந்தி பரவின. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நயன்தாரா பகிர்ந்தார்.
இந்நிலையில் இன்று விக்னேஷ் சிவனுடன் இருக்கும் அழகான புகைப்படங்களை நயன்தாரா பதிவிட்டுள்ளார். இதன் மூலம் விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு நயன்தாரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.