விவாகரத்து ஆன ஆண்கள்... நிகழ்ச்சியாக கொண்டாட அடித்த இன்விடேஷன் - வைரல் சம்பவம்!

Viral Photos Madhya Pradesh Divorce
By Sumathi Sep 12, 2022 10:17 AM GMT
Report

விவாகரத்து ஆன ஆண்கள் அதனை நிகழ்ச்சியாக கொண்டாட ஏற்பாடு செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்து 

மத்தியப் பிரதேசத்தில் விவாகரத்து கோரும் ஆண்களுக்காக பாய் வெல்ஃபேர் சொசைட்டி என்ற தனியார் தொண்டு நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. இந்த தொண்டு நிறுவனம் வரதட்சணை கொடுமை,

விவாகரத்து ஆன ஆண்கள்... நிகழ்ச்சியாக கொண்டாட அடித்த இன்விடேஷன் - வைரல் சம்பவம்! | Divorce Celebration Event In Bhopal

விவாகரத்து உள்ளிட்ட விவகாரங்களில் பாதிக்கப்படும் ஆண்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு இலவச சட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், தொண்டு நிறுவனம் கடந்த 2, 3 ஆண்டுகளில் நீண்டகால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு விவாகரத்து பெற்ற

அழைப்பிதழ்

18 ஆண்களை அழைத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. வரும் 18-ம் தேதி போபால் அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் இந்த நிகழ்வு நடைபெறும் என தொண்டு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விவாகரத்து ஆன ஆண்கள்... நிகழ்ச்சியாக கொண்டாட அடித்த இன்விடேஷன் - வைரல் சம்பவம்! | Divorce Celebration Event In Bhopal

இதற்காக அழைப்பிதழ்களும் அச்சடிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது தொடர்பாக தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாக்கி அகமது கூறுகையில்,

 நிகழ்ச்சி ரத்து 

`` இந்த நிகழ்வு இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என போன் செய்து தெரிவிக்கின்றனர். நாங்கள் விவாகரத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் மோசமான திருமணம் சில நேரங்களில் தற்கொலைக்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாகத்தான் நாங்கள் அதை நிறுத்த விரும்புகிறோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த இலவச சட்ட உதவிகளை வழங்கி வருகிறோம்'' என்றார். இதனைத் தொடர்ந்து, சில பெண்கள் அமைப்புகள் இந்தக் கொண்டாட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.