கணவரின் ஆபிஸுக்கு சென்று திட்டினால் விவாகரத்து செய்யலாம் - நீதிமன்றம் அதிரடி

Chhattisgarh Divorce
By Sumathi Aug 31, 2022 06:16 AM GMT
Report

மனைவி, அவரது கணவரின் அலுவலகத்திற்கு சென்று திட்டி, அதற்கு விவாகரத்து கோரும் பட்சத்தில் அது செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்

சட்டீஸ்கர், தம்தாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 31 வயது நபர். இவர் அரசு ஊழியராக பணியாற்றுகிறார். கடந்த 2010ம் ஆண்டு ராய்ப்பூரைச் சேர்ந்த 34வயது பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.

கணவரின் ஆபிஸுக்கு சென்று திட்டினால் விவாகரத்து செய்யலாம் - நீதிமன்றம் அதிரடி | High Court Of Chhattisgarh Says In Divorce Case

இந்நிலையில், சிறிது நாட்களில் மனைவி, அவரது கணவரின் அலுவலகம் சென்று அவரையும் குடும்பத்தினரையும் அவமரியாதையுடன் நடத்தியதோடு, அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

 மனைவி கொடுமை

இதனால், மனமுடைந்த நபர் ராய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு விண்ணப்பித்திருந்தார். வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அந்த பெண்ணின் கொடுமை நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

கணவரின் ஆபிஸுக்கு சென்று திட்டினால் விவாகரத்து செய்யலாம் - நீதிமன்றம் அதிரடி | High Court Of Chhattisgarh Says In Divorce Case

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மனைவி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் கெளதம் பாதுரி மற்றும் ராதாகிஷன் அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 விவாகரத்து செல்லும்

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “குடும்ப நல நீதிமன்றம் முழுமையாக விசாரித்து வழங்கிய தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை. கணவரின் அலுவலகத்துக்கு சென்று பலருக்கு முன் அவரை திட்டுவதும் கொடுமைப்படுத்துவதற்கு சமம் தான்.

அதோடு, அவரை பணியிடமாற்றம் செய்யக்கோரி, அமைச்சருக்கு இந்தப் பெண் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அந்தப் பெண் குறிப்பிட்டு உள்ளார்.

ஆனால், அதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை இதனால் இன்னல்களை அனுபவிக்கு நபர் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்ததால் அவருக்கு நீதிமன்றம் அளித்த விவாகரத்து செல்லும்” என்று உத்தரவிட்டனர்.