வினேஷ் போகத் தகுதி நீக்கம் - இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு விளக்கம் !
. ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வினேஷ் போகத்
ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், சுமார் கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் வினேஷ் போகத்தின் தகுதிநீக்கம் குறித்து இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
அதில், நேற்று மாலை 2 கிலோ கூடுதலாக உடல் எடை இருந்த நிலையில், இரவு முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் விடிய விடிய வினேஷ் உடற்பயிற்சி செய்துள்ளார். இதனால் சுமார் 100 கிராம் எடைகூடியுள்ளார் . மேலும் இந்த நேரத்தில் வேறு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.
தகுதி நீக்கம்
வினேஷ் போகத்தின் தனியுரிமைக்கு மரியாதை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் கூறிக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளார்.