வினேஷ் போகத்தின் பதக்கம் பறிப்பு - இந்திய ரசிகர்களுக்கு பேரிடி!
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வினேஷ் போகத்
பிரான்ஸ் பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் போட்டியில் 50 கிலோ பிரிவில் ஜப்பான் வீராங்கனை சுசாக்கியை வீழ்த்தி கால் இறுதிக்கு சென்றார்.
தொடர்ந்து காலிறுதியிலும் அபாரமாக விளையாடிய வினேஷ் போகட் தற்போது அரையிறுதியில் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற கணக்கில் என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகாட் வரலாறு படைத்தார் .
ஒரே நாளில் உலகின் நம்பர்.1 வீரரையும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சுசாகி உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்து வரலாற்று சாதனை பெற்றார்.
தகுதி நீக்கம்
இந்த நிலையில் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் போட்டி விதிகளின் படி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்பொழுது ,வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வெள்ளி பதக்கம் வழங்கப்பட மாட்டாது என்றும் , மேலும் வெண்கல பதகத்திற்க்கான போட்டி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.