செட்டில் பண்ண அம்பானி - திருமண நிகழ்ச்சியை வைத்து செக் - சமரசமாகினார் ரோகித்..?

Rohit Sharma Mumbai Indians Mukesh Dhirubhai Ambani
By Karthick Mar 03, 2024 02:50 AM GMT
Report

அம்பானியின் மகன் திருமணத்தில் ரோகித் சர்மா கலந்து கொண்டுள்ள நிலையில், அவருக்கும் மும்பை அணிக்கும் இருக்கும் பிரச்சனை தணிந்துள்ளதாக கருத்துக்கள் பரவி வருகிறது.

மும்பை - ரோகித் பிரச்சனை

கேப்டன் பதவியில் இருந்து ரோகித் நீக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் சற்று முரணான போக்குகள் நீடித்து வருவதாக கூறப்பட்டது.

dispute-between-mumbai-team-and-rohit-settled-

ரோகித்தின் மனைவியான ரித்திகா கூட தனது ஆதங்கத்தை வெளிப்படையாகவே தெரிவித்தார். பிரச்சனை பெரிதாக இருக்கிறதா..? என்று பலரும் நினைத்து வந்த நிலையில், அதற்கு ரோகித் முடிவுரை எழுதியுள்ளார்.

வலுக்கும் கோரிக்கை - 5-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் கேப்டன் இல்லையா..?

வலுக்கும் கோரிக்கை - 5-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் கேப்டன் இல்லையா..?

பங்கேற்பு

குஜராத்தில் நடைபெற்று வரும் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு உலகின் பல முக்கிய பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

dispute-between-mumbai-team-and-rohit-settled-

இதில் மும்பை அணியின் வீரர்களுக்கும் அழைப்பு சென்றுள்ளது. ரோகித் கலந்து கொள்ளமாட்டார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அதனை புறந்தள்ளி ரோகித் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

dispute-between-mumbai-team-and-rohit-settled-

இந்த நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியாவும் பங்கேற்றுள்ளார். இந்த திருமணத்தை வைத்து அணிக்குள் இருக்கும் முரண்பாடுகளை களைந்து விட மும்பை அணி நிர்வாகம் முற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.