ரஞ்சிதா பிரதமரா..? நித்தி'க்கு வந்த சிக்கல்..! கைலாசாவில் களேபரம்!!
சாமியார் நித்தியானந்தாவின் கைலாசாவில் அவரது சிஷியர்கள் போர்க்கொடி தூக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நித்தியானந்தா
தமிழகத்தை அடிப்படையாக கொண்ட சாமியார்களின் அதிக கவனம் பெறுபவர் நித்தியானந்தா தான். சிறு சிறு உபேதசங்கள் செய்து வந்த அவர் மக்களிடம் பெற்ற செல்வாக்கை சில இடங்களில் தவறாக பயன்படுத்தியதாகவும், பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக புகார்கள் பல எழ அவரை தேடும் குற்றவாளியாக இந்திய அரசு அறிவித்தது.

இந்தியாவில் இருந்து தப்பிய நித்தியானந்தா கைலாசா என்ற புதிய நாடை நிறுவி, அதற்கான தனி வெப்சைட் ஒன்றை துவங்கி, சமூகவலைத்தளங்களில் தனது ஆன்மீக உபதேசத்தை மேற்கொண்டு வருகின்றார்.
பிரதமரா ரஞ்சிதா..?
நாட்டை நிறுவிய பிறகு, நித்தி நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதாவை நியமித்தது தற்போது அவரது சிஷியர்களிடம் இருந்தே கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. நடிகை ரஞ்சிதா - நித்தியானந்தா தொடர்பான வீடியோக்கள் சில ஆண்டுகள் முன்பு சன் டிவி தொலைக்காட்சியில் வெளியானதை எளிதில் மறந்து விட முடியாது.

முதலில் மருந்து மாத்திரை கொடுப்பது, கை கால் பிடிப்பது போன்ற பணிவிடைகளை செய்து வந்த ரஞ்சிதா, எப்படி கைலாசாவில் தலைமை பொறுப்பிற்கு வரலாம் என்றும் தாங்கள் கைலாசவிற்காக பொறுப்பிற்கு கஷ்டப்பட்டு இருக்கிறோம் என பலர் குறை கூறி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil