இயக்குனர் விக்ரமன் வீட்டில் அமைச்சர்; குவிந்த மருத்துவர்கள் - முதலமைச்சருக்கு நன்றி!

Tamil Cinema M K Stalin Ma. Subramanian
By Sumathi Oct 30, 2023 10:43 AM GMT
Report

இயக்குநர் விக்ரமனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்துள்ளார்.

இயக்குநர் விக்ரமன்

திரைப்பட இயக்குநர் விக்ரமன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “என்னுடைய மனைவிக்கு 5 வருடமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இயக்குனர் விக்ரமன் வீட்டில் அமைச்சர்; குவிந்த மருத்துவர்கள் - முதலமைச்சருக்கு நன்றி! | Director Vikraman Thanks To Cm Mk Stalin

அவரது முதுகில் தவறாக செய்த ஆப்ரேஷனின் விளைவாக அவரால் நடக்க முடியாது. படுத்த படுக்கையாக தான் இருந்தார். இந்த நிலைமையை விளக்கி நான் பேட்டி கொடுத்திருந்தேன்.

படுத்த படுக்கையில் பிரபல இயக்குநரின் மனைவி - நெஞ்சை உலுக்கும் தகவல்!

படுத்த படுக்கையில் பிரபல இயக்குநரின் மனைவி - நெஞ்சை உலுக்கும் தகவல்!

 முதலமைச்சர் உதவி

அதன் எதிரொலியாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வீட்டுக்கு வந்து நேரில் பார்த்தார். உடன் டாக்டர் பட்டாளத்தையே அழைத்து வந்திருந்தார். என் மனைவியை பரிசோதித்து பார்த்தனர்.

இயக்குனர் விக்ரமன் வீட்டில் அமைச்சர்; குவிந்த மருத்துவர்கள் - முதலமைச்சருக்கு நன்றி! | Director Vikraman Thanks To Cm Mk Stalin

பின்னர் சிறப்பான சிகிச்சை அளித்து குணமடையச் செய்கிறோம் என உறுதியளித்தனர். இந்த நேரத்தில் முதல்வருக்கும், அமைச்சருக்கும் எனது நன்றிகள். என்னுடைய மனைவி குணமாக வேண்டும் அது தான் எனக்கு முக்கியம்.” எனத் தெரிவித்துள்ளார்.