தவறான சிகிச்சை..5 வருடங்களாக படுத்த படுக்கை!! துயரத்தில் சிக்கித்தவிக்கும் இயக்குனர் விக்ரமன்!!

Tamil Cinema Tamil Directors
By Karthick Oct 29, 2023 04:22 AM GMT
Report

90-களில் குடும்ப கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கி தொடர் வெற்றிகளை அளித்தவர் இயக்குனர் விக்ரமன்.

இயக்குனர் விக்ரமன்

1990-ஆம் ஆண்டு வெளியான புது வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விக்ரமன். முதல் படமே பெரிய வெற்றிப்படமாக அமைய அடுத்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், 1996-ஆம் ஆண்டு விஜய்யின் நடிப்பில் இருவரும் இணைத்த பூவே உனக்காக படம் இருவருக்கும் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

[90M349


மிக பெரிய வெற்றியை இப்படம் பெற, அதனை தொடர்ந்து இவர் இயக்கிய சூர்யவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி போன்ற படங்கள் தொடர் வெற்றியை பதிவு செய்தன.

தவறான சிகிச்சை

குடும்பங்கள் உண்மையாக கொண்டாடிய பல வெற்றி படங்களை கொடுத்த விக்ரமன் கடைசியாக 2013-ஆம் ஆண்டு நினைத்தது யாரோ என்ற படம் இயக்கினார்.

dir-vikraman-wife-bedridden-due-to-wrong-operation

அதன் பிறகு திரை துறையில் இருந்து விலகி இருக்கும் விக்ரமன் வாழ்கையியல் நடைபெற்ற விபரீதம் குறித்தான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

dir-vikraman-wife-bedridden-due-to-wrong-operation

விக்ரமனின் மனைவி அளித்திருந்த அந்த பேட்டியில், முதுகுவலி காரணமாக ஆப்ரேஷன் செய்து கொண்ட போது மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால், ஐந்து வருடங்களாக படுத்த படுக்கையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக சேர்த்து வைத்த அனைத்து சொத்துக்களையும் விற்று தான் கணவர் தன்னை கவனித்து வருகிறார் என்றும அவர் சோகத்துடன் பேட்டியளித்துள்ளார்.