என் தவறுக்கு வருந்துகிறேன் ஆனால் .. - இயக்குநர் சுதா கொங்கரா கொடுத்த விளக்கம்!
எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு இயக்குநர் சுதா கங்கோரா நன்றி தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா
திரைதுறையில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்கரா. சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சாவர்க்கர் பெரிய தலைவர், அனைவராலும் மதிக்கப்படுபவர், அவர் கல்யாணம் பண்ணிட்டு அவரோட மனைவியை படிக்க சொல்லி கட்டாய படுத்திதாகவும்
ஆனா அவருடைய மனைவிக்கு குடும்பத்தை பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதைத் தான் விரும்பினார் ஏனெனில் அப்போது பெண்கள் படிக்க முடியாத சூழல் தான் இருந்தது.
அந்த சூழ்நிலையிலும் சாவர்க்கரின் மனைவி பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகும் போது அவரை தெருவில் உள்ளவர்கள் அசிங்கம் படுத்துவார்கள் கிண்டல் செய்வாங்க, அதனால அந்த அம்மா அழுவாங்க, இத சாவர்க்கர் கிட்ட சொல்லி நான் இனிமே ஸ்கூலுக்கு போகமாட்டேனு சொல்லி அழுதாங்க,
உடனே சாவர்க்கர் நாளைக்கு நான் உன்ன கூட்டிட்டு போறன், யாரு என்ன சொல்ராங்கனு நான் பாக்குறேன், வா என்று சொல்லி அவரு கைய புடிச்சி கூட்டிட்டு போவாரு, அது சரியா ? தவறா ? சோ என்னோட கேள்வி அங்க இருந்து ஸ்டார்ட் ஆச்சி. இவ்வாறு இயக்குனர் சுதா கொங்கரா பேசியிருந்தார்.
சாவர்க்கர்
இந்த நிலையில் சாவர்க்கர் குறித்து பேசிய இயக்குநர் சுதா கங்கோராவிற்கு சமூக வலைதளத்தில் வரலாற்று தகவல்களுக்கும் சாவர்க்கருக்கும் துளி கூட சம்பந்தம் கிடையாது என பலரும் கண்டம் தெரிவித்தனர். தற்பொழுது சாவர்க்கர் குறித்து பேசிய இயக்குநர் சுதா கங்கோரா விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ,'' என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும்.
அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை.
எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.