தமிழ்நாட்டு மக்களிடம் கெஞ்சி கேட்கிறேன்; அப்படிப்பட்ட பிகர் வேண்டாம் - செல்வராகவன் உருக்கம்

Tamils Tamil nadu Selvaraghavan Tamil
By Karthikraja Sep 23, 2024 12:31 PM GMT
Report

ஆங்கிலம் தெரியாமல் நிறைய நாட்கள் அழுதுள்ளேன் என செலவராகவன் பேசியுள்ளார்.

செல்வராகவன்

புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன போன்ற படங்களை இயக்கியுள்ள செல்வராகவன் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர். இவர் நடிகர் தனுசின் அண்ணன் ஆவார். 

director selvaraghavan

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தமிழக மக்களிடம் கெஞ்சிகேட்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

விஜய் உடன் இணைத்து பரவிய வதந்தி - ஆவேசமாக பதிலளித்த சிம்ரன்

விஜய் உடன் இணைத்து பரவிய வதந்தி - ஆவேசமாக பதிலளித்த சிம்ரன்

தமிழ் மெல்ல சாகும்

இதில் பேசிய அவர், "தமிழ் இனி மெல்ல சாகும் என பாரதியார் கூறியிருந்தார். அது எவ்வளவு உண்மை என்றால், தமிழ் ஏற்கனவே தீவிர சிகிச்சை பிரிவில், வெண்டிலேட்டரில் படுத்து இருக்கிறது. எங்கே பார்த்தாலும் ஆங்கிலம், ஆங்கிலம், ஆங்கிலம் என்று தான் உள்ளது. 

director selvaraghavan

ஆங்கிலம் தெரியாதவர்களும் கூட திக்கி திணறி ஆங்கிலத்தில் பேச முயற்சி செய்கின்றனர். தமிழில் பேசுவதை அவமானமாக, அருவருப்பாக நினைக்கின்றார்கள். எனக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கு என்ன அவசியம் என்பதை சத்தியமாக புரியவில்லை.

நிறைய அழுதேன்

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலம் தெரியாமல் நான் எவ்வளவு அவமானப்பட்டேன் என்று எனக்கு நன்றாக தெரியும். இதற்காக நான் நிறைய நாட்கள் அழுதேன். ஆங்கிலம் தெரியாமல் நான் திணறினேன். கல்லூரியில், எல்லோரும் ஆங்கிலம் நன்றாக பேசுவார்கள். அப்படியே வெட்கப்பட்டு வளர்ந்திருக்கிறோம்.

அதன் பிறகுதான் எனக்கு ஒரு வெறி வந்தது. ஹிந்து எக்ஸ்பிரஸ் பத்திரிகை, ஆங்கிலப் புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். அர்த்தம் தெரியவில்லை என்றால் பக்கத்திலேயே ஒரு அகராதி வைத்துக்கொண்டு அதை பார்த்து, படித்தேன். ஒரு கட்டத்தில், ஓரளவுக்கு ஆங்கிலத்தில் நன்றாக பேச ஆரம்பித்துவிட்டேன்.

கெஞ்சி கேட்பது ஒன்றுதான்

சினிமாவுக்கு வந்தபிறகு இன்னும் ஆங்கிலத்தை நன்றாக பேச ஆரம்பித்தேன். ஆனாலும் நான் தமிழன்; எங்கே போனாலும் தமிழில்தான் பேசுவேன். நான் உங்களிடம் கெஞ்சி கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் தமிழில் பேசுங்கள். எங்கே போனாலும், தலை நிமிர்ந்து, தமிழில் நன்றாக, சத்தமாகப் பேசுங்கள். 

யாராவது, நீங்கள் தமிழில் பேசுவதை அவமானமாகப் பார்த்தால், அவர்களை ஒரு முறை கேள்வி கேளுங்கள். நீங்கள் தமிழ் பேசுவதை ஒரு பிகர் என அவமானமாக பார்த்தால் அப்படிப்பட்ட பிகர் நமக்குத் தேவையில்லை என தூக்கி எறியுங்கள். நமக்கு தமிழ் பெண்ணே போதும். உலகத்தில் எந்த நாட்டுக்கு, தீவுக்கு சென்றாலும் அவர்களின் தாய் மொழியில் தான் பேசுகிறார்கள்" என பேசியுள்ளார்.