எவ்வளவு சொல்லியும் திருந்தாத மருமகள், திட்டிய தனுஷின் தந்தை - விவாகரத்திற்கு காரணம் இவர்தானா?
திருமணத்திற்கு பின்னரும் திருந்தாமல் இருந்த மருமகளை கஸ்தூரிராஜா திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
செல்வராகவன்
திரைப்பட இயக்குனரான செல்வராகவன் ஆரம்ப காலத்தில் தந்தை கஸ்தூரிராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் எழுத்தாளராக பணியை துவங்கினார். பின் தன் தம்பியை கதாநாயகனாக காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தி தன்னை ஓர் இயக்குனராக வெளிப்படுத்தினார்.
இவர் செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் 2006-ம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்தார்.
விவாகரத்து
இந்நிலையில், நடிகை சோனியா அகர்வாலுக்கு திருமணத்திற்கு முன்னரே புகைபிடிக்கும் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. கல்யாணத்திற்கு பிறகு திருந்தி விடுவார் என்று நினைத்தனர், ஆனால் அந்த பழக்கத்தை விட முடியாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்துள்ளார்.
இதனால் இவரது மாமனார் கஸ்தூரி ராஜா நேரடியாகவே இவரிடம் இந்த பழக்கத்தை எல்லாம் உன்னால் விட முடியாதா என கொஞ்சம் கடுமையாகவே பேசி உள்ளார். அதற்கு சோனியா அகர்வால் என்னால் அதெல்லாம் விட முடியாது என்று வாக்குவாதம் ஏற்பட்டதால் செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் பிரிந்து விட்டனர். இருவரும் சுமூகமாக பேசி விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.