71 வயதில் தீவிரமாக திருமணத்திற்கு பெண் தேடும் முதியவர் - எதுவுமே கிடைக்கலையாம்.!
முதியவர் ஒருவர் தனது 71 வயதில் திருமணத்திற்கு பெண் தேடி வருகிறார்.
அரசு சலுகை
ஹரியானா, ரேவாரியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சத்பீர் சிங்(71). இவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார். பிள்ளைகள் டெல்லியில் வசித்து வருகின்றனர். இவர் தனது ஊரிலேயே பாழடைந்த வீட்டில் தனியாக தங்கி வசித்து வருகிறார்.
சமீப காலமாக அரசு நல திட்டங்கள் ஏதும் முறையாக கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்திலும் குடும்பஸ்தர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் ஏதும் கிடைப்பதில்லை என புலம்பியுள்ளார்.
திருமணத்திற்கு தயார்
தொடர்ந்து, அரசு சலுகைகளுக்காக அலுவலகங்களில் முறையிட்டு விரக்தியாகி விட்டார். இதனால், திருமணத்தின் போது மணமகன் தலையில் அணியும் அலங்கார தொப்பியை அணிந்து கொண்டு அரசு அலுவலகங்களில் வலம் வந்துள்ளார்.
மேலும், திருமணம் செய்து மீண்டும் குடும்பதஸ்தானாக தயார் என்று கூறிவந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.