அரை மணிநேரத்தில் 1 சமோசா சாப்பிட்டால் போதும்; கையில் 71 ஆயிரம் - கடை ஓனர் சவால்!
அரை மணிநேரத்தில் 1 சமோசா சாப்பிட்டால், 71 ஆயிரம் தருவதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
'பாகுபலி' சமோசா
உத்தரபிரதேசம், மீரட் பகுதியைச் சேர்ந்தவர் சுபகௌசல். இவர் அங்கு சமோசா மற்றும் இனிப்பு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், 12 கிலோ எடை கொண்ட ஒரு சமோசாவை தயாரித்துள்ளார். உருளைக்கிழங்கு, பட்டாணி ஆகியவைகளை வைத்து இந்த சமோசா உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக மூன்று சமையல் கலைஞர்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், 'பாகுபலி' சமோசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை அரை மணி நேரத்தில் ஒருவர் சாப்பிட்டு காண்பித்தால் 71 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு
மேலும் இந்த சமோசாவை சாப்பிடும் போட்டிக்கு விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு சமோசாவின் விலை 1500 ரூபாய் என்றும், போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றால் 71 ஆயிரம் ரூபாய் தரப்படும் இல்லையேல் சமோசாவிற்கான 1500 ரூபாய் செலுத்த வேண்டும்.
இதுவரை பாகுபலி சமோசா சாப்பிடும் களத்தில் 50 பேர் இறங்க முன்பதிவு செய்துள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.