வேலையை விட்டுட்டு சமோசா விற்ற தம்பதி - தினம் 12 லட்சம் வருமானமாம்.!
வேலையை ராஜினாமா செய்துவிட்டு தம்பதி சமோசா விற்பனை செய்து வருகின்றனர்.
வேலை வேண்டாம்
பெங்களூரைச் சேர்ந்த நிதி சிங் மற்றும் அவரது கணவர் சிகர் வீர்சிங் ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டனர். ஹரியானாவில் பயோ டெக்னாலஜி பிடெக் படிக்கும் போது இருவரும் சந்தித்து காதலித்துள்ளனர்.
அதன்பின், கார்ப்பரேட் நிறுவனத்தில் மாதம் 30 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் அளவுக்கு புரமோஷன் கிடைத்து இருவரும் உயர்ந்துள்ளனர். இந்நிலையில், தாங்கள் பார்க்கும் வேலையில் திருப்தி அடையாததால் வித்தியாசமாக ஏதாவது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
சமோசா விற்பனை
அப்போது அவர்கள் ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்றபோது அங்கு ஒரு குழந்தை சமோசா வேண்டும் என்று அழுது அடம் பிடித்ததை பார்த்தனர். தொடர்ந்து சமோசா கடையை வைத்துள்ளனர்.
இதன்மூலம் தினமும் ரூ.12 லட்சம் தற்போது சம்பாதித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சமோசா சிங் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கடையில், சமோசா சுவையாக இருந்ததால் வியாபாரம் உயர்ந்ததாகவும், இந்தியாவின் பல நகரங்களில் கிளைகளை அமைத்து நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.