ஜோதிகாவின் அந்த செயல்.. மொத்தமும் போச்சு, திருப்தியே இல்ல - இயக்குனர் வருத்தம்!

Jyothika Tamil Cinema Tamil Actress Tamil Directors
By Vinothini Nov 02, 2023 09:00 AM GMT
Report

 நடிகை ஜோதிகா நடித்த படம் குறித்து அதன் இயக்குனர் பேசியுள்ளார்.

இயக்குனர்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் மின்னலே, காக்க உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இய்குனார் கிருஷ்ணன். இவர் சில்லுனு ஒரு காதல் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

jyothika

இதனை 2006ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா, வடிவேலு, சந்தானம் உள்ளிட்டோரை வைத்து உருவாக்கினார். முதல் படத்திலேயே ஏ.ஆர்.ரஹ்மானை இசைக்கு கமிட் செய்ததன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது, இந்த படம் ஹிட் ஆனது.

தமன்னா கூட அது மட்டும் வேண்டாம்.. எச்சரித்த நடிகரின் மகள் - ஷாக்!

தமன்னா கூட அது மட்டும் வேண்டாம்.. எச்சரித்த நடிகரின் மகள் - ஷாக்!

பேட்டி

இந்நிலையில், இயக்குனர் கிருஷ்ணன் இதுகுறித்து பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர், "சூர்யாவின் பழைய காதலை டைரி மூலம் தெரிந்துகொள்ளும் ஜோதிகா சூர்யாவின் காதலியான பூமிகாவை வீட்டுக்கு வர வைப்பார். அப்போது சூர்யா ஜோதிகாவிடம் எதற்காக பழைய காதலியை அழைத்து வந்தாய் என கேட்க நான் உன்னை காதலிக்கிறேன் என ஜோதிகா அழுதபடி சொல்வார்.

sillunu oru kadhal

அந்த சீனை எடுத்து முடித்த பிறகு ஜோதிகா அழுதபடி நடிப்பதை பார்த்து ஸ்பாட்டில் இருந்தவர்கள் கைத்தட்டி பாராட்டினார்கள். ஆனால் என்னக்கு திருப்தி இல்ல, இன்னொரு டேக் எடுக்கலாம் அழுகாம நடிங்க என்று சொன்னேன்.

ஜோவும் நடித்தார்.. போஸ்ட் ப்ரொடக்சன் அப்போ எல்லாரும் அந்த சீன் தான் நல்லாருக்குனு சொன்னாங்க அதுனால அதை வைத்துவிட்டேன். ஆனால் அதற்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்ல.. அந்த ஒரு சீன் அதுனால என் படம் மொத்தமும் போச்சு" என்று கூறி வருத்தப்பட்டார்.