இதனால்தான் விஜய்யை நான் ஹீரோவாக ரசிக்கிறேன், மதிக்கிறேன் - நடிகர் பார்த்திபன் பெருமிதம்!

Parthiban Vijay Tamil Cinema Actors Tamil Actors
By Jiyath Oct 12, 2023 11:30 AM GMT
Report

இயக்குநர் மற்றும் நடிகரான பார்த்திபன் நடிகர் விஜய்யை குறித்து பாராட்டி பேசியுள்ளார். 

லியோ

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இதனால்தான் விஜய்யை நான் ஹீரோவாக ரசிக்கிறேன், மதிக்கிறேன் - நடிகர் பார்த்திபன் பெருமிதம்! | Director Parthiban Has Praised Actor Vijay

படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து பாடல்களும் வெளிவந்து ஹிட் அடித்தது. மேலும் சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

ஆனால் டிரைலரில் ஒரு காட்சியில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் படக்குழு அந்த வார்த்தையை டிரைலரில் இருந்து நீக்கியுள்ளனர். வரும் 19ம் தேதி லியோ திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

'அவர் அதை பண்ணுவாரு' - அந்தளவு டெடிகேஷனை கனவில் கூட நினைக்கவில்லை - லோகேஷ் கனகராஜ்!

'அவர் அதை பண்ணுவாரு' - அந்தளவு டெடிகேஷனை கனவில் கூட நினைக்கவில்லை - லோகேஷ் கனகராஜ்!

பார்த்திபன் பாராட்டு

நடிகர் விஜய்க்கு பொதுமக்கள் மட்டுமல்லாமல், திரையுலகத்தில் பல ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் விஜய்யை வாழ்த்தி பேசுவார்கள். அந்தவகையில் இயக்குநர் மற்றும் நடிகரான பார்த்திபன் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை குறித்து பேசியதாவது "பொதுவாக ஹீரோக்கள் எல்லாமே அதிவேகத்தில் நடந்து வந்தால், நின்றாள், நடந்தால் கைதட்டல்கள் வரும்.

இதனால்தான் விஜய்யை நான் ஹீரோவாக ரசிக்கிறேன், மதிக்கிறேன் - நடிகர் பார்த்திபன் பெருமிதம்! | Director Parthiban Has Praised Actor Vijay

ஆனால் விஜய்யை நான் ரசிப்பது ஏனென்றால், சமீபத்தில் ஒரு பத்திரிகை நிருபர் சம்பந்தமான பிரச்சனை வந்தது. அப்போது விஜய் அன்று மாலையிலேயே மிக கண்ணியமாக, அந்த பெண்ணியத்தை ஆதரவளிப்பது போல கண்ணியமான ஒரு செய்தியை தெரியப்படுத்தினார்.

அங்குதான் நான் விஜய்யை ஹீரோவாக மதிக்கிறேன். அது உலகத்தில் உள்ள அனைத்து பெண்களையும் ஆதரவளிப்பது மாதிரியான ஒரு சந்தோஷமான கருத்து. அதற்காக நான் அவரை தனிப்பட்ட முறையில் பாராட்டுகிறேன்" என்று பார்த்திபன் பேசியுள்ளார்.