விஜய் சேலையை இழுப்பார்; பளார்னு ஒரு அறை விட்டேன் - நடிகை சங்கவி வெளிப்படை!
கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகை சங்கவி பேசியுள்ளார்.
நடிகை சங்கவி
தமிழில் 'அமராவதி' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சங்கவி. அதைத் தொடர்ந்து நாட்டாமை, கட்டுமரக்காரன், லக்கி மேன், விஷ்ணு,கோயம்புத்தூர் மாப்பிள்ளை என அடுத்தடுத்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்தார்.
கோகுலத்தில் சீதை, தாய் வீடு போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். 2016ல் ஐடி நிபுணரான வெங்கடேஷை திருமணம் செய்துகொண்டார். அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஸ்டார்ட் மியூசிக்' என்ற நிகழ்ச்சியில் சங்கவி பங்கேற்றார். அப்போது கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.
பேச்சு
சங்கவி பேசியதாவது "கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் "ஒரு தேதி பார்த்தால்" என்ற பாடலின் சீனில் நெருப்பு முகத்திற்கு குறுக்கே போகும். அப்போது விஜய் எனது சேலையை இழுப்பார். நான் அவரை ஒரு அறை விடுவேன்.
அதற்காக நிறைய காட்சிகள் எடுத்தோம். ஆனால் சரியாக வரவில்லை. ஒருமுறை மண்ணெண்ணெய் ஊற்றியும் பார்த்தார்கள். அப்போதும் வரவில்லை. பின்னர் எனது சாரியில் மண்ணெண்ணெய் ஊற்றினார்கள், அது பக்கென்று பற்றி விட்டது.
பயத்தில் நான் விஜய்யை பளீர் என்று ஒரு அரை விட்டேன். அப்போது விஜய் சொன்னார் "அடித்தால் காதிலிருந்து சத்தம் வரும் என்று சொல்வார்கள், அதை இப்போதுதான் அனுபவப்பட்டேன் என்று விஜய் சொன்னார்" என்று சங்கவி பேசியுள்ளார்.