எப்பவும் சிம்பு பிரச்சனை இல்லை...அவரோட பெற்றோர்கள் தான்!! பாண்டிராஜ் பகீர் பேட்டி!!

Silambarasan T Rajendar
By Karthick Jun 11, 2024 12:33 PM GMT
Report

நடிகர் சிம்பு மீது பலவகையான விமர்சனங்கள் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.

சிம்பு

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகனாக வளம் வருகிறார் சிம்பு என்கிற சிலம்பரசன். தந்தை டி.ஆர் போலவே பல திறமைகளை கொண்டுள்ள சிம்பு, இடையில் உடலெடை அதிகரிப்பு, தொடர் தோல்வி, தயாரிப்பாளருடன் பிரச்சனை என சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதுங்கிய சூழலும் இருந்தது.

Simbu in maanadu

ஆனால், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது. அதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களை முடித்துள்ளார்.

Simbu in long beard look

தற்போது கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் "Thug life", ராஜ்கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமியுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கின்றார். எப்போதும் சிம்புவை குறித்து நற்செய்திகளை விட அவதூறான செய்திகள் தான் அதிகளவில் பரவும். அவர் ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வருவதில்லை, அது இல்லை..இது இல்லை என.

Actor Simbu in VTV

ஆனால், அவருடன் பழகியவர்களில் சிலர் அளிக்கும் பேட்டியில் அவரை குறித்து நல்லவிதமாக பேசுகிறார்கள். அப்படி தான் சிம்புவை வைத்து இது நம்ம ஆளு படத்தை இயக்கிய பாண்டிராஜ் பேட்டி ஒன்றில் சிம்பு குறித்து நேர்மறையாகவே பேசியிருக்கிறார்.

16 வருஷமா சிம்பு'வ லவ் பண்றேன்..! ப்ரபோஸ் பண்ண பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் தங்கச்சி..!!

16 வருஷமா சிம்பு'வ லவ் பண்றேன்..! ப்ரபோஸ் பண்ண பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் தங்கச்சி..!!

சிம்பு பிரச்சனை இல்லை 

அவர் அளித்த பேட்டியில், எனக்கும் சிம்புவுக்கும் பிரச்சனை என்று சொல்கிறார்கள். ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை. அவரது அப்பா அம்மாவால் தான் பிரச்சனை வந்தது. படத்தின் ஷூட்டிங்கிற்கு சிம்பு லேட்டாக வந்தாலும், 8 மணி நேரத்தில் படமாக்க வேண்டிய காட்சிகளை 5 மணி நேரத்தில் முடித்துவிடுவார்.

Actor Simbu Director Pandiraj

அவ்வளவு திறமையான நபராக சிம்பு இப்படி இருக்கிறாரே என்பது தான் நான் வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் கோபப்பட்டதில்லை. அவரும் என்னை குறித்து விடிவி கணேஷிடம் பெருமையாக பேசியுள்ளார். இப்போதும் நாங்கள் நட்புடன் தான் இருக்கிறோம் என பேசியுள்ளார்.