பொறுக்கி பொறுக்கி.. விஷாலுக்கு ஈகோ அதிகம் - உண்மை உடைத்த மிஷ்கின்!

Vishal Tamil Cinema Mysskin Tamil Actors
By Vinothini Aug 09, 2023 07:24 AM GMT
Report

இயக்குனர் மிஷ்கின் நடிகர் விஷால் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இசைவெளியீட்டு விழா

நடிகர் ஜி.வி. பிரகாஷ், வெங்கட் பிரபு, கௌரி ஜி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அடியே'. இத்திரைப்படத்தின் ஆடியோ மற்றுன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.

director-mysskin-says-about-actor-vishal

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா, இயக்குநர்கள் வசந்த பாலன், சிம்பு தேவன், மிஷ்கின், ஏ.எல் விஜய், கார்த்திக் சுப்புராஜ், அருண் மாதேஸ்வரன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

மிஷ்கின் பேச்சு

இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், "நான் பொறுக்கி, பொறுக்கி எனப் பேசியதை சொல்லிக்கிட்டே இருக்கீங்க. விஷாலும், என்னைப் பத்தி யாராவது கேட்டால், நான் துரோகத்தை மறக்கமாட்டேன் எனச் சொல்லிக்கொண்டே இருக்கான். என்ன துரோகம் எனத் தெரியவில்லை.

director-mysskin-says-about-actor-vishal

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. அவன், என்றும் என் இதயத்துக்கு நெருக்கமானவன். சண்டை போட்டுக்கிட்டோம் அவ்வளவுதான். சண்டை போடாமல் எப்படி வாழ்க்கையில் இருக்க முடியும். அது ஒரு நல்ல நட்பு. ரெண்டு பேரும் ரொம்ப நேசிச்சோம். திடீரென்று சண்டை போட்டுக்கிட்டோம்.

அவனை ரொம்ப மிஸ் பண்ணுறேன். ஆனால் அவன் என்னை மிஸ் பண்ணமாட்டான். அது எனக்கு தெரியும். அவனுக்கு ஈகோ அதிகம். எனக்கும் இருக்கு. ஆனால் நான் அதை மேனேஜ் பண்ணிப்பேன். பொறுக்கின்னு ஒரு வேகத்தில் சொல்லிட்டேன், அத தவிர்த்தரலாம்.

அவன் ஒரு இனிமையான மனிதன், அவன் படம் வெற்றி பெற பிரார்த்தனை பண்ணிக்கிறேன். உடனே எல்லாரும் விஷாலுக்காக ஐஸ் வைக்கிறேன் எனச் சொல்வார்கள். விஷாலோடு இனிமேல் சத்தியமா படமே பண்ணமாட்டேன். கெஞ்சவும் மாட்டேன்" என்று கூறியுள்ளார்.