விஷாலுக்கும் எனக்கும் காதல் திருமணம்...? - நடிகை அபிநயா பரபரப்பு பேட்டி...!
விஷாலுடன் திருமணம் குறித்து நடிகை அபிநயா விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகர் விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளராக மீண்டும் பொறுப்பில் உள்ளார்.
நடிகை அபிநயா
சசிகுமாரின் ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். வாய் பேச முடியாத இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே அபிநயா விஷாலுடன் ‘பூஜை’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 45 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கு நடிகர் விஷால் குறித்து அவ்வப்போது திருமணம் தகவல்கள் கசிந்து வருகின்றன. நடிகை அபிநயாவுடன் காதல் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வைரலானது.
நடிகை அபிநயா விளக்கம்
தற்போது, இது குறித்து நடிகை அபிநயா விளக்கம் கொடுத்து பேசுகையில், ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நான் விஷாலின் மனைவியாக நடித்து வருகிறேன். அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நிஜமாகவே எங்களுக்கு திருமணமாகி விட்டது போன்ற வதந்திகளை கிளப்பப்பட்டு வருகிறது. இத்தகவல் முழுக்க முழுக்க பொய் என்று என்று கூறி திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.