சாதி மறுப்பு திருமணம்...அப்படி என்ன சாதிக்க போறீங்க!! கொந்தளித்த மோகன் ஜி
நெல்லை சாதி மறுப்பு திருமணம் தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி பதிவு வெளியிட்டுள்ளார்.
மோகன் ஜி
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்தவர் மதன் குமார் (28). இவருக்கும்,பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (23) என்ற பெண்ணும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது.

இதனால் இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் திருமணம் திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சாதி மறுப்பு திருமணம் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தலைமையில் நடந்துள்ளது.
அந்த வலி..
இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், அதிரடியாக அலுவலகத்துக்குள் புகுந்து அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி தனத்தினு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு பேசுபொருளாகியுள்ளது.

அதில், இந்த நிலையை கடந்த பெற்றோர்களுக்கு மட்டுமே தெரியும் இது எந்த மாதிரியான வலி என்று.. பெற்றவர்களை இப்படி புரண்டு அழ வைத்து அப்படி என்ன தான் சாதிக்க போறீங்க தம்பி, தங்கைகளே.. அவர்களை சம்மதிக்க வைத்து உங்கள் காதலை கைகூட செய்யுங்கள்.. அதுவே உண்மையான காதல் என்று குறிப்பிட்டுள்ளார்.  
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    