அந்த நடிகையை கட்டிப்பிடிக்க சூர்யா அவ்வளவு தயங்கினார் - சீக்ரெட் உடைத்த இயக்குநர்!

Suriya Tamil Cinema G. Marimuthu
By Sumathi Jun 18, 2024 05:30 PM GMT
Report

சூர்யா குறித்து மறைந்த இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இதுவரை 43 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்தார்.

அந்த நடிகையை கட்டிப்பிடிக்க சூர்யா அவ்வளவு தயங்கினார் - சீக்ரெட் உடைத்த இயக்குநர்! | Director Marimuthu About Suriyas Carreer

இப்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். கடைசி இரண்டு வருடங்களாக சூர்யா நடிப்பில் எந்தப் படமும் வெளியாகததால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

என்ன ஜென்மம்.. ஒரு நடிகையை காதலிக்கிறான் - சூர்யா ஜோதிகா காதல் எதிர்ப்பு குறித்து சிவகுமார்!

என்ன ஜென்மம்.. ஒரு நடிகையை காதலிக்கிறான் - சூர்யா ஜோதிகா காதல் எதிர்ப்பு குறித்து சிவகுமார்!

மாரிமுத்து தகவல்

அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் மறைந்த இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து சூர்யா குறித்து அளித்த பழைய பேட்டி ஒன்றில்,

அந்த நடிகையை கட்டிப்பிடிக்க சூர்யா அவ்வளவு தயங்கினார் - சீக்ரெட் உடைத்த இயக்குநர்! | Director Marimuthu About Suriyas Carreer

"ஒரு புதுமுக நடிகரை தட்டிக்கொடுத்து வேலை வாங்க வேண்டும். நான் நேருக்கு நேர் படத்தில் வசந்த்திடம் உதவி இயக்குநராக இருந்தேன். அந்தப் படத்தில் சூர்யா நடிப்பதற்கு ரொம்பவே தடுமாறினார். சிம்ரனை கட்டிப்பிடிக்க சொன்னார் வசந்த்.

ஆனால் சூர்யாவால் அது முடியவே இல்லை. தயங்கி தயங்கி நடித்தார். ஒருகட்டத்தில் நடிப்பு என்பதை புரிந்துகொண்டு நடிக்க தொடங்கினார்" எனத் தெரிவித்துள்ளார்.