நடிகை மீனாக்கு எல்லாமே அவர்தான்; அஜித்துக்கு அத பண்ணனும்னு.. - போட்டுடைத்த இயக்குநர்!
இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், நடிகை மீனா குறித்து பேசியுள்ளார்.
நடிகை மீனா
90ஸ்'களில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் நடிகை மீனா. 1982ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சிவாஜி நடித்த நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தில் முதன் முறையாக நடித்தார். பின்னர் 1990ல் 'ஒரு புதிய கீதை' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.
ரஜினி,கமல்,அஜித்,என அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் மீனா நடித்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அண்மையில் மீனாவின் 40 வருட திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்று 'மீனா 40' என்ற நிகழ்ச்சியை நடத்தியிருந்தனர்.
கே.எஸ் ரவிக்குமார்
அதில் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் நடிகை மீனா குறித்து பேசியதாவது "மீனாவுடைய அம்மாவை குறித்து நான் பேசியாக வேண்டும். அந்த காலத்தில் மீனாவுக்கு பவுன்சர் அவரின் அம்மாதான். அவரைத் தாண்டி மீனாவை நெருங்கவே முடியாது.
பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, அவரின் எதிர்காலத்தைப் பற்றி மீனாவை விட அதிகமாக யோசித்தது அவரின் அம்மா தான்" என்றார். மேலும் பேசிய அவர் "வில்லன் படத்தின்போது, அஜித்திற்கு ஜோடியாக தான் பண்ண வேண்டும் என்பதில் மீனாவுக்கு அவ்வளவு ஆர்வம்.
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி என்று சொன்னார். அந்த படத்தில் அஜித்தையும், மீனாவையும் சேர்த்து வைப்பது போல் முதலில் இல்லை. பின்னர்தான் கடைசியில் 2,3 சீன்கள் சேர்த்து அஜித்துக்கு ஜோடி சேர்வது போல் வந்தது" என்று கேஎஸ் ரவிக்குமார் பேசியுள்ளார்.