சாமி தரிசனத்திற்க்கு சென்ற பிரபல நடிகை, பொசுக்குனு கிஸ் அடித்த இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல நடிகை சாமி தரிசனத்திற்காக திருப்பதிக்கு வந்தபொழுது இயக்குனர் திடீரென முத்தம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிபுருஷ்
பரபால இயக்குனரான ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகிறது 'ஆதிபுருஷ்' திரைப்படம்.இது இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வருகின்றது.
இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். மேலும், பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இயக்குனர் முத்தம்
இந்நிலையில், இந்த படக்குழுவினர் படம் வெற்றிபெற வேண்டும் என்று சாமி தரிசனத்திற்க்காக திருப்பதிக்கு சென்றுள்ளனர்.
இவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த படம் வெற்றிபெறுவதற்காக பிரார்த்தனை செய்தனர்.
பின்னர், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர், அதன்பிறகு காரில் கிளம்பும்போது இயக்குனர் கீர்த்தி சனோனிடம் சென்று கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்தார். தற்போது இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.