திடீரென திருப்பதிக்கு படையெடுக்கும் பக்தர்கள்; 36 மணி நேரம் காத்திருப்பு - இதுதான் காரணம்!
திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
கோடை விடுமுறை
கோடை விடுமுறை காரணமாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இலவச தரிசன டோக்கன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, திருப்பதி மலைக்கு சென்று இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர். அங்கும் இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீள வரிசையில் காத்திருக்கின்றனர்.
36 மணி நேரம்..
இந்நிலையில், இலவச தரிசனத்திற்காக சென்ற பக்தர்கள் 36 மணி நேரம் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை வழிபட வேண்டிய நிலை நிலவி வருகிறது. ரூ.300 டிக்கெட்டுகளை முன் பதிவு செய்த பக்தர்கள் நான்கு மணி நேரம் காத்திருந்து வழபடுகின்றனர்.
ஏராளமான பக்தர்கள் வருகையினால், நேற்று கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் மூன்று கோடியே 37 லட்ச ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருமானம் கிடைத்துள்ளது.