பிரபல இயக்குனர் உடல்நல குறைவால் காலமானார் - திரையுலகினர் இரங்கல்!

Vinothini
in பிரபலங்கள்Report this article
உடல்நல குறைவு காரணமாக பிரபல இயக்குனர் காலமானதால் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர்
பிரபல தெலுங்கு பட இயக்குனர், கே.வாசு 72 வயதான நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துசிவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.
இவர் தெலுங்கு முன்னணி கதாநாயகன் சிரஞ்சீவியை முதன் முதலில் பிராணம் கரீது என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.
சிரஞ்சீவி முதலில் நடித்தது புனிதக் ரால்லு என்ற படமாக இருந்தாலும் அதற்கு முன்பாகவே கே.வாசு இயக்கிய பிராணம் கரீது படம் திரைக்கு வந்து விட்டது.
இரங்கல்
இதனை தொடர்ந்து, இவர் இயக்கிய ஸ்ரீ சீரடி சாய்பாபா படம் இந்தியா முழுவதிலும் உள்ள சாய்பாபா பக்தர்களின் மனதை கவர்ந்தது.
கோத்தல ராயுடு, இண்டிலோ ஸ்ரீமதி வீதிலோ குமாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
இவரது தந்தை பிரத்தியேகாத்மா, சகோதரர் ஹேமாம்பதராவ் ஆகியோரும் இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இயக்குனர் கே.வாசு மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
