லண்டன் வரும் ராணி எலிசபெத் உடல் : கண்ணீரில் பொதுமக்கள் .. அஞ்சலிக்கு தயாராகும் பிரிட்டன்
பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். 96 வயதான அவர் பால்மாரல் அரண்மனையில் தங்கி இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
ராணி எலிசபெத் காலமானார்
சிகிச்சை இதையடுத்து மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தனது வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் ராணி பட்டம் பெற்று ஆட்சி நடத்தியுள்ள பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த நிலையில் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள அரண்மனையில் இரண்டாம் ராணி எலிசபெத் உயிரிழந்த நிலையில், அவரது உடலை லண்டன் எடுத்து வரும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.
அவரது உடல் சுமார் 5 நாட்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. முதலில் பிரிட்டன் அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிலையில், அதன் பின்னர் பொதுமக்களும் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
அரசராகும் சார்லஸ்
ராணியின் உடல் இன்று லண்டனுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் வழக்கப்படி, ராணி உயிரிழந்த 2ம் நாள் காலை, பிரிட்டன் கவுன்சிலின் உறுப்பினர்கள் சார்லஸை புதிய அரசராக அறிவிப்பார்கள்.
அதுவரை அவர் இடைக்கால அரசராக செயல்படுவார் என கூறப்படுகிறது , ராணி இறந்த மறுநாள், அதாவது இன்று மீண்டும் கொடிகள் ஏற்றப்பட்டு காலை 11 மணிக்கு சார்லஸ் அதிகாரப்பூர்வமாக மன்னராக பதவியேற்பார். இன்று மாலை அரச தலைவராக தனது முதல் உரையை அவர் ஆற்றுவார்.
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், ராணியின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளுக்காகக் காத்திருந்த மக்கள், அவரது மரணத்தைக் கேள்விப்பட்டதும் அழத் தொடங்கினர். அவரது மறைவுசெய்து அறிந்து, ஏராளமானோர் அரண்மனை வாயிலில் கூடியுள்ளனர்.
ராணி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் பாடல்களை பாடி கண்ணீர் மல்க வெளிப்படுத்தி வருகிறார்கள்,ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும் எனவும், 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.