கில்லி ரீ ரிலீஸுக்கு வந்த கூட்டம் வாக்களிக்க வரல - இயக்குநர் ஹரி வருத்தம்!
வாக்கு சதவீதம் குறைந்திருப்பது வருத்தமளிப்பதாக இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஹரி
இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ரத்னம். இப்படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். ரத்னம் திரைப்படம் வரும் 26-ம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு திருநெல்வேலியில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர் ஒருவர்"20 வருடத்திற்கு பிறகு ரீ ரிலீஸான கில்லி படத்தை பார்க்க தியேட்டரில் ஏகப்பட்ட கூட்டம் கூடியது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலுக்கு பதிவான வாக்கு 60 சதவீதத்தைக் கூட தொடவில்லை.
வருத்தம்
இதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இயக்குநர் ஹரி "இதை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. 100 சதவீதத்திற்கான வாக்குப்பதிவிற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் வேலை என இன்னும் சில பிரச்சனைகள் இருக்கலாம்.

ஆனால், வீட்டில் இருந்தவர்கள் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, எனது உரிமை, என் பிரதமரை நான் தான் தேர்வு செய்வேன் என்ற எண்ணம் வரவேண்டும். முன்பைவிட இந்த முறை வாக்களிப்பது மிகவும் எளிமையாக நடந்தது.
முதியவர்களுக்கு நாற்காலி எல்லாம் கொடுக்கப்பட்டது. இப்படி இருக்கும் போது வாக்களிப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது. அடுத்த முறையாவது வாக்களித்த சதவீதம் அதிகரிக்க வேண்டும்" என்றார்.
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil