ஏமாற்றிய பிரபல நடிகர் - இயக்குனர் பகீர் புகார்!
இயக்குனர் சச்சின் என்பவர், பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மீது பரபரப்பு புகாரளித்துள்ளார்.
சாயாஜி ஷிண்டே
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் காமெடியனாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே. தமிழில், அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம், ரஜினிகாந்த் நடித்த பாபா, விக்ரமுடன் தூள், போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் மீது இயக்குனர் சச்சின் என்பவர் போலீஸில் புகாரளித்துள்ளார். அதில், சாயாஜி ஷிண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக 5 லட்சம் ரூபாய் சம்பளமும் முன்னதாகவே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது திரைக்கதையில் தன்னுடைய கதாபாத்திரத்தை மாற்றக்கோரியுள்ளார்.
பகீர் புகார்
அப்படி இல்லையென்றால் படத்தை விட்டு விலகுவதாகவும், 5 லட்சம் ரூபாயை திருப்பி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், சச்சின் வேறு ஒரு நடிகரை இந்த படத்தில் நடிக்க வைக்க தேர்வு செய்துள்ளார்.
ஆனாலும், சாயாஜி ஐந்து லட்ச ரூபாயை திருப்பி தருவதாக கூறியும் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது தனக்கு ஏற்பட்ட இழப்புக்காக 17 லட்சம், மொத்தம் 22 லட்சம் தர வேண்டும் என சச்சின் கோரியுள்ளார். அதன் அடிப்படையில், இரு தரப்பினரிடமும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.