கால்கள் வீங்கிய நிலையில் இறந்த பிரபல நடிகர்-மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்..!
தமிழ்சினிமாவில் வெண்ணிலா கபடிக் குழு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஹரி வைரவன்.
ஹரி வைரவன் மறைவு
இவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாகவே ஹரி வைரவனின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இருதய நோய் ஏற்பட்டதுடன் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்தன. இதனால் அவருக்கு கால்கள் வீங்கி நடக்க முடியாத நிலையில் அவதிப்பட்டு வந்தார்.
அவரது மரணம் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஹரி வைரவனின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் மற்றும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது நகைச்சுவை நடிகர் சூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஹரி வைரவன் மறைவுக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
திரையுலகினர் இரங்கல்
அதில் 'இன்று காலை தம்பி வைரவனின் மறைவு செய்தி கேட்டு பெரும் துயர் கொண்டேன். பிரிவின் மீளா துயரில் தவிக்கும் குடும்பத்தாருக்கு அந்த ஆத்தா மீனாட்சி எல்லா தைரியத்தையும் தர வேண்டுகிறேன். போய் வா தம்பி' என உருக்கமாக தன்னுடைய இரங்கலை பதிவிட்டுள்ளார்.
நடிகர் சூரியுடன் குள்ளநரிக் கூட்டம், வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, வேலாயுதம் ஆகிய படங்களில் ஹரி வைரவன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் நாயகனான விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், மன்னித்து விடுங்கள் வைரவன்..
'உனது மறைவு வருத்தமளிக்கிறது வைரவன். உனது ஆன்மா சாந்தியடையட்டும். வெண்ணிலா கபடிகுழுவின் உங்களுடன் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் ஹரி வைரவனின் இறுதிச் சடங்குகள் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.