வெண்ணிலா கபடிக்குழு நடிகர் ஹரி வைரவன் காலமானார் - திரையுலகினர் இரங்கல்
வெண்ணிலா கபடிக்குழு நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் காலமானார்.
அறிமுகம்
சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், கிஷோர், சரண்யா மோகன், சூரி, அப்புக்குட்டி உட்பட பலர் நடித்து, கடந்த 2009ல் வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடிக்குழு. இப்படம் தமிழகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் வெண்ணிலா கபடிக்குழு அணியில் இடம்பெற்ற நடிகர் ஹரி வைரவன், அப்படத்திற்கு பின்னர் ஒருசில படங்களில் நடித்திருந்தார். அதன்பின் அவர் குறித்த தகவல் இல்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதும், சிகிச்சைக்கு பணம் இன்றி தவிப்பதும் தெரியவந்தது.
உடல்நலக்குறைவால் காலமானார்
அவரின் உடல் எடை முற்றிலும் குறைந்து, குழந்தை போல மனைவியால் பராமரிக்கப்பட்டு வந்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பல நடிகர்கள் உதவி செய்தனர்.
இந்நிலையில், வெண்ணிலா கபடிக்குழுவில் இடம்பெற்ற நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஹரி வைரவன் உயிரிழப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.