பேருந்து ஓட்டுநரின் அடாவடி செயல் - காரில் இருந்து இறங்கி இயக்குநர் சேரன் செய்த சம்பவம்!
பேருந்து ஓடுநரால்ஆவேசமடைந்து இயக்குனர் சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பேருந்து ஓட்டுநர்
கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு அதிக அளவில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் அதிவேகமாக அந்த சாலையில் செல்வது வழக்கம். அதேபோல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை பயன்படுத்தி ஒலி எழுப்பியவாறு செல்கின்றன.
இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த இயக்குனர் சேரன் தன்னுடைய காரில் பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது நெடு நேரமாக அதிக அளவில் ஒலி எழுப்பியவாறு ஒரு தனியார் பேருந்து வந்துள்ளது.
அந்த பேருந்துக்கு வழிவிட இடம் இல்லாத பகுதியில் சேரனின் காரும் வந்து கொண்டிருந்து. இடை விடாமல் ஒலி ஏழுப்ப பட்டதை அங்கு தனது காரை நடுரோட்டில் நிறுத்திய சேரன் அந்த பேருந்து ஓட்டுனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இயக்குநர் சேரன்
ஒதுங்குவதற்கு கூட வழி இல்லாத சாலையில் அதிக ஹாரன் எழுப்பி எதற்கு மக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள் எப்படி ஒதுங்கி உங்களுக்கு வழிதர முடியும் என கேள்வி எழுப்பினர்.
இந்த பேச்சு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஆகவே அந்த பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் மற்றும் மற்ற பேருந்தில் வந்த பேருந்து நடத்துனர்கள் இறங்கி சேரனை சமாதானம் செய்து அவரை காரில் ஏற்றி வழி அனுப்பி வைத்தனர்.
அதேபோல தொடர்ந்து இந்த பகுதியில் செல்லும் போதெல்லாம் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பி செல்வதாகவும் இதற்கு போக்குவரத்துக் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேரன் கேட்டுக் கொண்டுள்ளார்.