கங்கனா கன்னத்தில் பளார்; CISF பெண் காவலருக்கு hats off...இயக்குனர் சேரன் ஆதரவு!
கங்கனா கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எப் பெண் காவலருக்கு சேரன் ஆதரவளித்துள்ளார்.
கங்கனா ரணாவத்
தமிழில் ஜெயம் ரவியின் "தாம் தூம்" படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். முன்னணி நடிகையான இவர் அரசியலிலும் ஈடுபாடு காட்டுகிறார். தற்போது நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக மந்தி தொகுதியில் களமிறங்கிய கங்கனா 537022 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
இதை தொடர்ந்து, டெல்லி செல்வதற்காக நடிகை கங்கனா ரணாவத் சண்டிகர் விமான நிலையம் வந்தபோது, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு அவரை சிஐஎஸ்எப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார். உடனே, இது தொடர்பாக கங்கனா ரனாவத் வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தார்.
இயக்குனர் சேரன்
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா ரனாவத் கூறியிருந்ததால் அறைந்ததாக விசாரணையில் குல்விந்தர் கவுர் தெரிவித்துள்ளார். இதனால், அந்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் சேரன் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து ஒரு பதிவை வெளியிட்டார். அதில், இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.. அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது..
இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.. அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off.. https://t.co/vE6Ue86Yyx
— Cheran (@directorcheran) June 7, 2024
விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off.. என்று குறிப்பிட்டுள்ளார்.