பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு - மருத்துவமனையில் அனுமதி!
இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா. தற்போது படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுசுக்கு தாத்தாவாக பாரதிராஜா நடித்துள்ளார்.
இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இன்று அவருக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதி
இதை அடுத்து சென்னை, தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அவர் இருப்பார் எனவும் பாரதிராஜா தரப்பில் கூறப்படுகிறது.