பாக்யராஜின் முதல் மனைவி இறந்தது எப்படி? 2 வருஷத்தில் முடிவுக்கு வந்த திருமணம்!
பாமா ருக்மணி திரைப்படம் வெளியாகி 43 வருடங்கள் கடந்துள்ளது.
பிரவீணா
பாக்யராஜ் நாயகனாக நடித்த பாமா ருக்மணியில் இரண்டாவது நாயகியாக நடிக்கும் வாய்ப்பு பிரவீணாவுக்குக் கிடைத்தது. படம் வெளியானதற்கு அடுத்த வருடம் - 1981 இல் தனது நெடுநாள் காதலர் பாக்யராஜை பிரவீணா திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்தார். 1983 இல் மஞ்சள் காமாலை நோயால் தனது 25 வது வயதில் மரணமடைந்தார். நடிகை பிரவீணா கே.பாலசந்தரின் மன்மத லீலை படத்தில் அறிமுகமானவர்.
திருமணம்
மலையாளத்தில் ஜெயன் நடித்த மற்றொரு கர்னண், விஸ்வரூபம், அவள் கண்ட லோகம் சத்ரு சம்ஹாரம் போன்ற படங்களில் நடித்தார். பிரவீணா சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கையில் பாக்யராஜுடன் நட்பு ஏற்பட்டது.
பாக்யராஜும் அப்போது சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு பிரவீணாவின் நட்பு பொருளாதார ரீதியாகவும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.