ஓவர் கிளாமரான சட்டையில் வந்த நயன்...கேரவன் கூட தராமல் மாத்த சொன்ன இயக்குனர்! பிரபலம் பகீர்

Nayanthara
By Karthick Jun 10, 2024 06:29 AM GMT
Report

நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது "மண்ணாங்கட்டி " என்ற படம் தயாராகி வருகின்றது.

நயன்தாரா

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் தனக்கென தனி அடையாளத்தை உண்டாக்கி முன்னணி நாயகியாக இருக்கின்றார் நயன்தாரா. சர்ச்சைகள் அவரை தொடர்ந்தாலும், அதனையெல்லாம் ஓரமாக தள்ளி தன்னுடைய திரை வாழ்க்கையில் மும்முரம் காட்டி வருகின்றார்.

Beautiful Nayathara

ஒரு சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தவர், பின்னர் தனது அடுத்த இன்னிங்ஸை துவங்கி, வரிசையாக ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி, கதையின் நாயகியாகவும் மும்முரம் காட்டி வருகின்றார்.

Beautiful Nayathara Jawaan

தற்போது அஜித்துடன் "விடாமுயற்சி" படத்திலும், கதையின் நாயகியாக "மண்ணாங்கட்டி" என்ற படத்திலும் நடித்து வருகின்றார் நயன்தாரா. அவரை குறித்து பலரும் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார்கள்.

இது வரை இல்லாத கவர்ச்சி - விருது விழாவில் அசத்திய நயன்தாரா - வீடியோ இதோ

இது வரை இல்லாத கவர்ச்சி - விருது விழாவில் அசத்திய நயன்தாரா - வீடியோ இதோ

ரொம்ப ஆபாசமா இருக்கு..

அப்படி தான் சினிமா பேட்டியாளர் அந்தணன் நயன்தாரா குறித்து பேசியுள்ளார் கருத்துக்கள் வைரலாகியுள்ளது. அப்பேட்டியில், கஜினி படத்தின் வில்லன்கள் நயன்தாராவை துரத்துவது போன்ற காட்சியின் ஷூட்டிங் போது, நயன் ஓடி வந்த போது, முருகதாஸ் திடீரென கட் சொல்லியிருக்கிறார்.

Beautiful Nayathara tops

காரணம், அப்போது நயன்தாரா அணிந்திருந்த சட்டை சற்று ஆபாசம் இருந்துள்ளது. இப்படி என்னால் எடுக்க முடியாது என கூறி, முருகதாஸ் வேறு சட்டை போட நயன்தாராவிடம் கூறியுள்ளார். அந்த நேரத்தில் நயன்தாராவிடம் வேறு சட்டை இல்லை.

Beautiful Nayathara saree

அதன் காரணமாக, நயன்தாரா "கடைசி நேரத்தில் இப்படி சொல்றீங்க...வேற ஷர்ட் நா எடுத்துட்டு வரல, மாத்திக்க இங்க கேரவனும் இல்ல" என கூறியிருக்கிறார்.

Beautiful Nayathara jeans

பின்னர் இருவரும் பேசி ஒரு முடிவிற்கு வந்து, வேறு சட்டை வாங்கி வாருங்கள் என்று சொல்ல உதவி இயக்குநர் பிளாட்பார்ம் கடையில் சட்டையை வாங்கி கொண்டு வந்த தர, அதனை காரின் ஒன்றின் பின்னால் சென்று மறைவில் நின்று மாட்டிக்கொண்டு வந்துள்ளார். இவ்வாறு அந்தணன் கூறினார்.